Saturday, December 30, 2006

கங்க ஜடாதர கௌரி சங்கர கிரிஜா மன ரமணா



கங்க ஜடாதர கௌரி சங்கர கிரிஜா மன ரமணா (ஜய)
ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ மஹேஸ்வர மங்கள சுப சரணா
ஹே நந்தி வாஹனா நாக பூஷணா
நிருபம குண சதனா
நடன மனோஹர நீலகண்ட சிவ
நீரஜ தள நயனா


கங்கையை சடையில் அணிந்தவனே. கௌரி சங்கரனே. மலைமகளான கிரிஜாவின் மனத்திற்கு ஆனந்தம் தருபவனே. மரணத்தை வென்றவனே. மரணதேவனை மார்க்கண்டேயனுக்காக உதைத்துத் தள்ளியவனே. தேவர்களின் சிறந்தவனே. எல்லாவித செல்வங்களையும் உடையவனே. சுபமும் மங்களமும் நிறைந்த திருவடிகளை உடையவனே. ஹே நந்தி வாகனனே. நாகத்தை அணிகலனாக அணிந்தவனே. இணையற்ற நற்குணங்களின் பெருங்கடலே. கூத்தனே. கூத்தால் எல்லோருடைய மனத்தையும் மயக்குபவனே. நீலகண்டனே. மிடற்றில் கரியவனே. மங்கள வடிவான சிவனே. நீரில் வாழும் தாமரையைப் போன்ற கண்களை உடையவனே.

No comments: