Saturday, December 30, 2006

கங்க ஜடாதர கௌரி சங்கர கிரிஜா மன ரமணா



கங்க ஜடாதர கௌரி சங்கர கிரிஜா மன ரமணா (ஜய)
ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ மஹேஸ்வர மங்கள சுப சரணா
ஹே நந்தி வாஹனா நாக பூஷணா
நிருபம குண சதனா
நடன மனோஹர நீலகண்ட சிவ
நீரஜ தள நயனா


கங்கையை சடையில் அணிந்தவனே. கௌரி சங்கரனே. மலைமகளான கிரிஜாவின் மனத்திற்கு ஆனந்தம் தருபவனே. மரணத்தை வென்றவனே. மரணதேவனை மார்க்கண்டேயனுக்காக உதைத்துத் தள்ளியவனே. தேவர்களின் சிறந்தவனே. எல்லாவித செல்வங்களையும் உடையவனே. சுபமும் மங்களமும் நிறைந்த திருவடிகளை உடையவனே. ஹே நந்தி வாகனனே. நாகத்தை அணிகலனாக அணிந்தவனே. இணையற்ற நற்குணங்களின் பெருங்கடலே. கூத்தனே. கூத்தால் எல்லோருடைய மனத்தையும் மயக்குபவனே. நீலகண்டனே. மிடற்றில் கரியவனே. மங்கள வடிவான சிவனே. நீரில் வாழும் தாமரையைப் போன்ற கண்களை உடையவனே.

படா சித்த சோரா பிருந்தாவன சஞ்சாரா



படா சித்த சோரா பிருந்தாவன சஞ்சாரா
கோபாலா கோபாலா ஹே முரளி கோபாலா (படா)

கோவர்த்தனோத்தார கோபால பாலா
கோபி மனோஹர ராதே கோபாலா (படா)


எல்லாருடைய இதயங்களையும் உன் அழகாலும் கருணையாலும் குறும்புகளாலும் பெருமைகளாலும் திருடும் பெரும் கள்வனே. பிருந்தாவனத்தில் சஞ்சரிப்பவனே. பசுக்களை மேய்க்கும் கோபாலனே. வேய்ங்குழலால் இசைத்துக் கொண்டே பசுக்களை மேய்ப்பவனே. கோவர்த்தனத்தைத் தூக்கி கோகுலத்தில் இருப்பவர்களைக் காத்த இடையர் குல சிறுவனே. கோபியர் மனங்களை மயக்குபவனே. இராதையின் கோபாலனே.

பாஹி கஜானன தீனாவனா



பாஹி கஜானன தீனாவனா
சிந்துர வதனா ஸ்ரித ஜன பாலன
அம்பிகதனயா அமராதீஸ்வர
அகணித குணகண ஆனந்த தாயக (பாஹி)

ஏழை எளியவர்களைக் காப்பவனே யானை முகனே. என்னையும் காப்பாய். சிவந்த சிந்துரம் போன்ற முகத்தை உடையவனே. சரணடைந்தவர்களைப் பாதுகாப்பவனே. அம்பிகையின் மைந்தனே. என்றும் வாழும் அமரர்களின் இறைவனே. எண்ணற்ற நற்குணங்களின் இருப்பிடமே. இன்பம் அருள்பவனே. அடியேனைக் காப்பாய்.


ஆஜானுபாஹும் அரவிந்த நேத்ரம்
ஆத்மாபிராமம் மனஸாஸ்மராமி (2)
பூலோக வைகுண்ட பர்த்தி நிவாஸம்
ப்ரபு சாயிராமம் மனஸாஸ்மராமி (2)

ஒரே நேரத்தில் நல்லவர்களைக் காத்தும் அல்லவர்களை அழித்தும் அருள் செய்யும் திரண்ட புஜங்களை உடையவனே. அனைவரையும் கருணையுடன் நோக்கி அருளும் தாமரைக் கண்களை உடையவனே. எல்லோருடைய இருதயத்திலும் அந்தர்யாமியாய் நின்று ஆனந்தம் அருளும் இராமனே. உன்னை என்றும் என் மனத்தில் வைத்து தியானிக்கிறேன்.

பூலோக வைகுண்டமாம் புட்டபர்த்தியில் வாழ்பவனே. என் தலைவனான சாயிராமனே. உன்னை என்றும் என் மனத்தில் வைத்து தியானிக்கிறேன்.

அம்பிகா தனயா கஜானனா




அம்பிகா தனயா பால கஜானன
கஜவதனா கணநாதா கஜானன
பாஹி கணேசா விநாயகா (2)
த்ரிபுவன பாலக மங்கள தாயக
வித்யா புத்தி சித்தி ப்ரதாயக
பாஹி கணேசா விநாயகா(2)

அம்பிகையாம் தேவி பார்வதியின் திருமகனே. ஞானத்தின் வடிவமான யானை முகனே. தெய்வ சக்திகளாம் கணங்களின் தலைவனே. என்னை காப்பாற்றுவாய் விநாயகனே. மூவுலகையும் ஆள்பவனே. மங்களங்கள் அருள்பவனே. கல்வி, அறிவு, சித்தி இவை அருள்பவனே. காப்பாற்றுவாய் கணநாதனே விநாயகனே.

வணக்கம்

அன்பு தமிழ்மக்களே. அன்பு சாயிபக்தர்களே. எத்தனையோ வலைப்பக்கங்கள் சாயிபஜனைகளுடன் இருக்கின்றன. அவற்றில் சில அர்த்தமும் சொல்கின்றன. கடவுளின் பல்வேறு நாமங்களையும் குணங்களையும் சாயிபஜனைகளுக்குப் பொருள் சொல்லுவதன் மூலம் அனுபவிப்பதற்காக நான் இந்த வலைப்பதிவைத் தொடங்கியிருக்கிறேன். சாயிபக்தர்களும் மற்றவர்களும் இந்த வலைப்பதிவிற்கு வந்து இறைவனின் நாமங்களையும் குணங்களையும் படித்தும் பாடியும் கேட்டும் அனுபவிக்கலாம். உங்கள் ஆதரவை எதிர்நோக்கி சுவாமியின் மலர்ப்பாதங்களை வணங்கித் தொடங்குகிறேன்.

அன்பன்,
ஒரு சாயிபக்தன்