Saturday, April 21, 2007
ஸ்ரீ சத்ய சாயி சுப்ரபாதம் - 1
ஓம் ஓம் ஓம்
ஈஸ்வராம்பா சுத ஸ்ரீமன் பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட சத்ய சாயீச கர்த்தவ்யம் தைவம் ஆஹ்னிகம்
உத்திஷ்டோத்திஷ்ட பர்த்தீச உத்திஷ்ட ஜகதீபதே
உத்திஷ்ட கருணாபூர்ண லோக மங்கள சித்தயே
ஈஸ்வராம்பாவின் திருமகனே! திருவாளனே! அதிகாலை நேரம் தொடங்கியது.
எழுந்திடுவாய் சத்ய சாயீஸ்வரா! தினந்தோறும் நடக்கும் தெய்வீகக் கடமைகள் நடக்க வேண்டும்!
எழுந்திடுவாய் எழுந்திடுவாய் பர்த்தியின் தலைவா! எழுந்திடுவாய் உலக நாயகா!
எழுந்திடுவாய் கருணைக் கடலே! உலகத்திற்கு மங்களத்தை விளைவிப்பாய்!
சித்ராவதி தட விசால சுசாந்த சௌதே
திஷ்டந்தி சேவக ஜனாஸ் தவ தர்சனார்த்தம்
ஆதித்ய காந்திர் அனுபாதி ஸமஸ்த லோகான்
ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்
சித்ராவதி நதிக்கரையில் இருக்கும் அமைதியான ப்ரசாந்தி நிலையத்தில் உங்கள் தரிசனத்திற்காக உன்னுடைய அடியார்கள் எல்லாம் கூடியிருக்கிறார்கள். சூரியனின் கதிர்கள் எல்லா உலகங்களிலும் நிறைந்து உள்ளது. ஸ்ரீ சத்ய சாயி பகவானே! உங்களுக்கு நற்காலையாகட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சாயி எங்கே உறங்குகிறான் நாம் எழுப்ப?
நம்மை நாமே நம்முள் எழுப்பத்தானே இதெல்லாம்!
நாம் நம் உறக்கத்தில் இருந்து எழுந்து நம்மை உணர்வோம்!
சாயிராம்!
இந்தப் பதிவை எனக்கு அனுப்பிய கோவியாரும் எழ சாயிநாதன் அருளட்டும்!
சாய்ராம் VSK.
நீங்கள் சொன்னது உண்மை. நம்மை நாமே எழுப்புவதற்குத் தான் இது. நம்முள் இருக்கும் இறை உணர்வு எழவேண்டி வேண்டும் வேண்டுதல் இது.
//இந்தப் பதிவை எனக்கு அனுப்பிய கோவியாரும் எழ சாயிநாதன் அருளட்டும்!//
நானெழுந்து வருடம் ஆகிவிட்டது நண்பரே. உங்களுக்கு வேண்டுமானால் இதெல்லாம் வியப்பாக இருக்கலாம்.
பாற்கடலில் ஒரு துளி கூட பாற்கடலின் தன்மையில் தான் இருக்கும். நீங்கள் கண்டுகொண்டது ஒரு துளியாகத்தான் இருக்கும். தத்துவங்களையும், நம்பிக்கைகளையும் தாண்டி வாருங்கள். எல்லாமுமே அற்புதமாக இருக்கும்.
ஒருபக்கம் மட்டுமே பார்த்துவிட்டு இதுதான் உண்மை என்று தான் நம்பிக்கைக் கொண்டுள்ளதை உலகாருக்கெல்லாம் உகந்த உண்மை இதுவே என்று கூறும் துணிவு எனக்கு இல்லை. ஏனெனில் உண்மையை அறிந்தவர் உளருபவர் அல்ல.
அவரவர் நம்பிக்கை அவரவற்கு. தான் விருப்பைப் பார்க்காமல் நண்பர்விரும்புவதைக் காட்டுவதில் ஒரு மகிழ்ச்சி. அதனால் சுட்டியைக் காட்டினேன். உங்கள் மேற்கண்ட சுட்டித் தனத்துக்கு அல்ல. எனக்கு அதில் ஏற்பும் இல்லை.
மெய்பொருள் காண்பது அறிவு.
இந்த மாதம் 26ம் தேதி பகவான் சத்யசாய்பாபா கொடைகானல் வருகிறார். மே மாதம் 6ம் தேதி வரை கொடைக்கானலில் பாபா தங்கியிருப்பார் என தெரிகிறது.
பகவானை "சாய்ஸ்ருதி" இல்லத்தில் தரிசிக்கலாம்.
கோவி.கண்ணன் & VSK.
நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தால் தெரிகிறது. இது சூடு குறைந்த உரையாடலாகவே இருக்கட்டும்.
தகவலுக்கு நன்றி பங்காளி.
Post a Comment