கைலாச வாசா ஹே த்ரிபுராரி
ஹாலாஹல தர சூலாயுத தர
சந்த்ரகலாதர நடன மனோஹர
பஸ்மோத்பவகர சாயி சங்கர
சாயி சங்கர சாயி சங்கர
திருக்கயிலையில் வாழ்பவனே! ஹே திரிபுர அசுரர்களை அவர்களின் பறக்கும் நகர்களுடன் சிரித்தெரி கொளுத்தியவனே! அகில உலகத்தையும் காக்க ஆலால விஷத்தை உண்டு திருமிடற்றில் தாங்கி நிற்கும் திருநீலகண்டனே! மும்மலங்களையும் அழிக்கும் திரிசூலத்தை ஏந்தியவனே! குளிர்ந்த நிலவை திருமுடியில் சூடியவனே! நடராஜனே! சாம்பலை உண்டாக்குபவனே! சாயி சங்கரனே!
உனக்கு இந்த சிவராத்திரி நன்னாளில் ஆயிரம் கோடி வணக்கங்கள்.
4 comments:
ஓம் நமசிவாய.
டிவோட்டியாரே தாங்கள் இருப்பது எந்த ஊரோ?
தங்கள் படத்தில் காட்டியுள்ள லிங்கத்தை எங்கே வாங்கினீர்கள்.
சிவா. உங்களைப் போல் நானும் மேற்குலக நாடுகள் ஒன்றில் தான் வசிக்கிறேன்.
படத்தில் இருக்கும் சிவலிங்கம் சுவாமி அண்மையில் சென்னையில் நடத்திய அதிருத்ர யக்ஞத்தில் பிரதான தெய்வமாக வீற்றிருந்து அருள் பாலித்த சுந்தரேஸ்வர லிங்கம்.
உங்க பாணியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே. நீங்க யாரு?
என் பாணி தானே? இருக்குமுங்க. யார் என்று வெளிப்படையாக சொல்வதாக இருந்தால் ஏன் புனைப்பெயர் வைத்துக் கொண்டு வருகிறேன்? நீங்கள் யாரென்று தெரியவில்லை. உங்க பேரை நீங்க சொல்லலை. நீங்க சொல்லியிருந்தா என்னை உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்று சொல்லியிருப்பேன்.
Post a Comment