Thursday, April 26, 2007

ஸ்ரீ சத்ய சாயி சுப்ரபாதம் - 2



த்வன் நாம கீர்த்தன ரதாஸ் தவ திவ்ய நாம
காயந்தி பக்தி ரஸபான ப்ரஹ்ருஷ்ட சித்தா
தாதும் க்ருபா ஸஹித தர்ஸனம் ஆசுதேப்ய:
ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்

உன்னுடைய தெய்வீகமான திருநாமங்களைப் பாடுவதில் இன்புறும் அன்பர்கள் பக்தியெனும் அமுதத்தைப் பருகி மகிழ்ந்த உள்ளத்தவராய் உங்களின் தெய்வீகத் திருநாமங்களைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரும்புகின்ற உங்களின் கருணையுடன் கூடிய தரிசனத்தைத் தந்தருளுங்கள். ஸ்ரீ சத்ய சாயி பகவானே! உங்களுக்கு நற்காலையாகட்டும்.

ஆதாய திவ்ய குஸுமானி மனோஹரானி
ஸ்ரீ பாத பூஜன விதிம் பவத் அங்க்ரி மூலே
கர்த்தும் மஹோத்ஸுகதயா ப்ரவிசந்தி பக்தா
ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்

தெய்வீகமான மனத்தை மயக்கும் நறுமணம் கொண்ட மலர்களை தங்களின் திருப்பாதங்களுக்கு விதி முறைகளின் படி பூஜை செய்ய மிகுந்த உற்சாகத்தோடு பக்தர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஸ்ரீ சத்ய சாயி பகவானே! உங்களுக்கு நற்காலையாகட்டும்.

2 comments:

VSK said...

எழவேண்டியவர்கள் அனைவரையும் எழுப்பும் அற்புத வரிகளுக்கு மிக்க நன்றி சாயிபக்தரே!
ஓம் சாயிராம்!

Sai Devotee 1970s said...

ஆமாம் VSK. ஒவ்வொரு குழுவினராக ஒவ்வொரு பாடலிலும் சொல்லிக் கொண்டு வருவார்கள். பலவிதமான மனிதர்கள் இருக்கும் உலகத்தில் எல்லோரும் இறையருள் பெற விழையும் பாடல்கள் இவை.