Monday, January 22, 2007
அனைத்து சமயங்களுக்கும் பொதுவான இறைவனே! சாயி சுந்தரனே!
அல்லா ஈஸ்வர் ஏக் துமி ஹோ!
துமிஹோ ராம ரஹீம்! ப்ரபோ!
துமிஹோ க்ருஷ்ண கரீம்!
நானக் ஏசு மஹாவீர தும்ஹோ!
புத்த ஜோராஷ்ட்ர ஜெஹோவா தும்ஹோ!
ஸர்வ தர்ம ப்ரிய சாயி சுந்தர!
ஸத்ய தர்ம சாந்தி ப்ரேம துமி ஹோ!
இஸ்லாமின் தெய்வமான அல்லாவும் சனாதன தர்மத்தின் இறைவனான ஈஸ்வரனும் ஒன்றே! அது நீயே!
நீயே ராமனும் ரஹீமும்! எம்பெருமானே!
நீயே கிருஷ்ணனும் கரீமும்!
சீக்கியர்களின் குருவான நானக்கும் கிறிஸ்துவர்கள் போற்றும் தேவ மைந்தன் ஏசுவும்
சமணர்களின் தீர்த்தங்கரரான மஹாவீரரும் நீயே!
பௌத்தர் வணங்கும் புத்தரும் பார்ஸிகள் வணங்கும் ஜோராஷ்ட்ரரும் யூதர்கள் வணங்கும் ஜெஹோவாவும் நீயே!
அனைத்து சமயங்களுக்கும் பொதுவான இறைவனே! சாயி சுந்தரனே!
உண்மை, அறம், அமைதி, அன்பு வடிவமும் நீயே!
L. கிருஷ்ணன் இசையமைத்து பம்பாய் சகோதரிகள் பாடிய இந்த சாயி பஜனையைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
சாய்ராம்!
சர்வ தர்ம ப்ரிய தேவா!
சத்ய சாயீசா!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி திரு. எஸ்கே.
சாய்ராம்!
சாய் ராம் சாய் ராம்
தவறான இடத்திற்க்கு வந்தீடீங்க.( தமிழ் மணம்) இங்க மார்க்ஸ் பெரியார் போன்ற பொறுக்கிகளின் அடியாட்க்கள் உங்களை கண்டபடி வசை மொழியால் தாக்குவார்கள். அனானி அதர் பின்னோட்டங்களை அனுமதிக்க வேண்டாம்.
Sairam. Enjoy free continuous video stream of Athi Rudram Yagnam in progress in Chennai in the divine presence of Sri Bhagwan at the following website. Love and Sairam.
http://player.narrowstep.tv/skins/0001/nsp.aspx?player=Sai_Ram
ஒரே ஒரு விஷயம் மட்டும் கேட்கிறேன். பதில் சொல்லுங்க...
சாயிபாபா மோதிரம் / லிங்கம் / விபூதி வரவழைப்பது உண்மையா இல்லையா ?
நீங்க டிவோட்டீயா இருங்க வேண்டாங்கல..ஆனால் பகுத்தறிவுக்கு எட்டாத விஷயம் தானே இது ?
தங்கம் எடுக்க முதல்ல தோண்டோனும்...பிறகு வழிக்கோனும்...பிறகு வடிகட்டோனும்...பொறவுதான் தங்கம் கிடைக்கும் இல்லையா ?
நீங்க பாபாவை கும்பிடுறதையோ, உங்கள் நம்பிக்கையையோ நான் குறை சொல்லவோ, கேள்வி கேட்கவோ இல்லை...எனக்கு அது உரிமையும் இல்லை...
ஆனால் பாபா மந்திரத்தில் மோதிரம் வரவழைக்கிறான் என்பதை கேட்டதில் இருந்து மண்டைக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருக்கிறது ...
தயவு செய்து விளக்குங்கள்...அது உண்மையா இருந்தா நானும் கும்பிடுறேனே...!!
சாய் பஜனைக்கு
நன்றி.
முடியுமானால்,
ஒவ்வொரு வியாழனும்
ஒவ்வொரு பஜனைப் பாட்டு
போடுங்களேன்.
சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
சாய் ராம் அனானிமஸ் நண்பரே. உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி. தமிழ்மணத்தில் பல நாட்கள் இருந்த நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். தெரிந்து தான் வந்தேன். வரக்கூடிய வசைமொழிகளின் சிலவற்றை சாம்பிளுக்கும் காட்டினார்கள். மாசில்லா மனத்துடன் இருப்பவர்கள் எதற்கு இதற்கெல்லாம் பயப்பட வேண்டும்? கமென்ட் மாடரேசன் தான் இருக்கிறதே. வருகின்ற வசைமொழிகளை எல்லாவற்றிற்கும் அடிப்படையான சாயிநாதனின் பக்கம் அனுப்பிவிட்டு அழித்துவிடுகிறேன்.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் சாயி கண்ணனுக்கே.
வேண்டுகோள்: மார்க்ஸ், பெரியார் போன்றவர்களை பொறுக்கிகள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி தடித்த வார்த்தைகளை இனிமேல் இந்தப் பதிவில் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். வசைமொழிகள் வரும் என்று சொல்லும் போதே நீங்களும் வசை பாடுவது நல்லதில்லை. சாயிநாதனுக்கு உவக்காது.
அனானி அதர் பின்னூட்டங்கள் பதிவிற்குத் தொடர்புடையதாக இருக்கும் வரை அனுமதிக்கப் போகிறேன்.
ஐயா,
அறிய வேண்டும் எனும் ஆர்வத்தில்தான் கேட்கிறேன். எதிர்வினைக்காக அல்ல. இவரை வழிபடுபவர்களை எந்த மதத்தவர் என்று அழைப்பது? எடுத்துக்காட்டாக, கிறிஸ்துவை வழிபடுபவர்கள் கிறிஸ்தவர். புத்தரை வழிபடுபவர் புத்தர்கள். சிவனை வழிபடுபவர் சைவர். அப்படி இவரை வழிபடுபவர்களை என்ன சொல்லி அழைக்கிறர்கள்?
சாய்ராம் எஸ்கே. சுட்டிக்கு நன்றி.
சாய்ராம் அனானிமஸ் நண்பரே.
//சாயிபாபா மோதிரம்/லிங்கம்/விபூதி வரவழைப்பது உண்மையா இல்லையா? //
உண்மை. இவை மட்டுமில்லை. உயிருள்ள பொருட்களையும் இவரை சோதிக்க வந்தவர்களிடம் வரவழைத்துக் காட்டியிருக்கிறார்.
இது பகுத்தறிவுக்கு எட்டாத விஷயமா என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? இன்னும் அறிவியலால் கண்டுபிடிக்க முடியாததாக இருக்கலாம் அல்லவா?
நீங்கள் சொல்லும் முறைப்படி தான் சாதாரணமாக தங்கம் கிடைக்கும். அது தான் விதி. விதி என்றால் விதி விலக்குகளும் இருக்கும். அது சாயிபாபா உருவாக்கும் தங்கமாக இருக்கக் கூடாதா?
//ஆனால் பாபா மந்திரத்தில் மோதிரம் வரவழைக்கிறான் என்பதை கேட்டதில் இருந்து மண்டைக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருக்கிறது ...
//
இப்படி ஏக வசனத்தில் அவரை நீங்கள் குறிப்பிட்டது இன்னும் மட்டமாக அவரைத் தாக்குபவர்கள் நடுவில் நீங்கள் கொஞ்சம் நாகரீகமானவர் என்பதைக் காட்டுகிறது.
//தயவு செய்து விளக்குங்கள்...அது உண்மையா இருந்தா நானும் கும்பிடுறேனே...!! //
நான் சொன்னால் அது உண்மையா இல்லையா என்று உங்களுக்குத் தெரிந்துவிடுமா? ஆன்மீக உண்மைகளை அவரவர்களே அறிந்து கொள்ளவேண்டும்.
சாய்ராம் அனானிமஸ் நண்பரே. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையே இடுவதாகத் தான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் வேலைப் பளுவால் வாராவாரம் இடமுடியவில்லை. அதனால் முடிந்த போதெல்லாம் இடுகிறேன்.
வெற்றி, எதிர்வினை செய்தாலும் நீங்கள் எதிரி ஆகிவிடுவீர்களா? எனக்குள் இருக்கும் இறைவனே உங்களுக்குள்ளும் இறைவனை மறுப்பவர்களுக்குள்ளும் இருக்கிறான்.
இவரை வழிபடுபவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை சாயி பக்தர்கள் என்று அழைக்கிறார்கள். கிறிஸ்துவர் சிறந்த கிறிஸ்துவராகவும் சைவர் சிறந்த சைவராகவும் இஸ்லாமியர் சிறந்த இஸ்லாமியராகவும் பௌத்தர் சிறந்த பௌத்தர்களாகவும் ஆகுவதற்கு வழிகாட்டுவதே தான் வந்த நோக்கம் என்று சொல்கிறார் இவர். அதுவே கண்கூடாகவும் நடக்கிறது. இவர் வழி தனி மதம் இல்லை. இவரை வழிபடுபவர்களும் புது மதத்தைச் சேர்பவர்கள் இல்லை.
விளக்கத்திற்கு நன்றி.
/* இவரை வழிபடுபவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். */
உண்மை. எனக்குத் தெரிந்த சில சிங்களப் பெளத்தர்கள் இவரது பக்தர்கள். மற்றும்படி எனக்கு எல்லாம் முருகன் தான் அய்யா.
நல்ல விளக்கம் சாய் டிவோட்டியாரே.
வாழ்க உமது பணி
அன்பு அனானிமஸ் அவர்களே!
ஒரு உதாரணத்திற்கு இவ்வுலகம் நாளை அழிகிறது என்று வைத்துக் கொள்வோம். பிறகு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு புதிய உலகமும், பரினாம வளரிச்சியின் காரனமாக புதிய மனித குலமும் தோன்றுகிறது என்றும் வைத்துக் கொள்வோம். அம்மனிதர்களில் சிலர் அகழ்வாராய்ச்சி செய்து 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள்,
தொலைப்பேசி என்னும் கருவி கொண்டு உலகின் ஒரு மூலையில் இருந்து வேறொரு மூலையில் உள்ளவர்களுடன் பேசினார்கள்.
தொலைக்காட்சி என்னும் கருவி கொண்டு உலகின் ஒரு மூலையில் நடந்த நிகழ்ச்சியை கண்டு களித்தார்கள்.
ஏவுகணை என்ற கருவியைக் கொண்டு உலகில் எங்கோ இருந்து கொண்டு அப்பகுதியிலோ வாழும் மக்களை கொன்றார்கள்.
விமானம் என்ற கருவி கொண்டு பறந்தார்கள்.
வின்களத்தின் மூலம் நிலவிற்கு சென்றார்கள்.
என்றெல்லம் சொல்கிறார்கள். அதை ஏற்காத சிலர் அவர்களை பகுத்தறிவிற்கு ஒவ்வாத செயல்களை சொல்லுவதாக கேலி செய்கிறார்கள்.
இதில், யார் அறியாமையில் இருப்பவர்கள்?
தொடர்ந்து முருகனை வழிபட்டு வாருங்கள் வெற்றி. மனம் எங்கே ஒருப்படுகிறதோ அங்கே இறைவன் இருக்கிறான்.
நன்றி கால்கரி சிவா.
வெற்றி. சொல்ல மறந்தேனே. சிங்கள பௌத்தர்கள் மட்டுமில்லை. ஈழத்தமிழ்ச் சைவர்களும் சிலர் இவரின் பக்தர்களாக இருக்கிறார்கள். தமிழ்மணத்திலும் இவர்களைப் பார்த்திருக்கிறேன்.
நல்ல பதில் 'ஒரு சாயி பக்தன்'. வருகைக்கும் பின்னூட்ட விளக்கத்திற்கும் நன்றி. சாய்ராம்.
சுட்டி தந்ததற்கு மிக்க நன்றி எஸ்கே சாய்ராம். சுவாமியை நேரடி ஒலிபரப்பில் நன்கு தரிசித்தேன்.
//வெற்றி. சொல்ல மறந்தேனே. சிங்கள பௌத்தர்கள் மட்டுமில்லை. ஈழத்தமிழ்ச் சைவர்களும் சிலர் இவரின் பக்தர்களாக இருக்கிறார்கள். தமிழ்மணத்திலும் இவர்களைப் பார்த்திருக்கிறேன். //
Ha good joke!
சிலர் alla பல Aayirak kanakkaanavarkal பக்தர்களாக இருக்கிறார்கள்.
OM SAI RAM!!!
(Sorry for my inability post in Tamil)
Sai bakthan,
Thabotharan. (from Jaffna, Sri Lanka)
ஆமாம் திரு.தபோதரன் கதிரவேலு. நீங்கள் சொல்வது போல் பல்லாயிரக்கணக்கான பேர் சாயி பக்தர்களாக இருக்கிறார்கள்.
Post a Comment