
ஸீதா ஸதீ சம விஸுத்த ஹ்ருதம்புஜாதா
பஹ்வங்கனா கரக்ருஹீத ஸுபுஷ்பஹாரா
ஸ்துன்வந்தி திவ்ய நுதிபி: பணிபூஷணம் த்வாம்
ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்
சீதாதேவியையும் உமாதேவியையும் போன்று தூய்மையான மனத்தாமரையைக் கொண்ட பெண்கள் பல விதமான ஆபரணங்களை அணிந்து கொண்டு பூமாலைகளை கைகளில் ஏந்திக் கொண்டு உன்னுடைய பல விதமான புகழ்களைப் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் - பாம்பினை அணிகலனாக அணிந்தவனே. ஸ்ரீ சத்ய சாயி பகவானே! உங்களுக்கு நற்காலையாகட்டும்.
ஸுப்ரபாதம் இதம் புண்யம் யே படந்தி தினே தினே
தே விசந்தி பரந்தாம ஞான விக்ஞான ஸோபிதா:
புனிதமான இந்த சுப்ரபாதத்தை யாரொருவர் தினந்தோறும் அன்புடன் ஓதுகிறார்களோ அவர்கள் ஞான அனுபவங்களைப் பெற்று பரந்தாமத்தை அடைந்து சுகமுறுவார்கள்.
மங்களம் குரு தேவாய
மங்களம் ஞான தாயினே
மங்களம் பர்த்தி வாசாய
மங்களம் சத்ய சாயினே
குருதேவருக்கு மங்களம் உண்டாகட்டும்.
ஞானத்தை அருளுபவருக்கு மங்களம் உண்டாகட்டும்.
புட்டபர்த்தியில் வாழ்பவருக்கு மங்களம் உண்டாகட்டும்.
சத்ய சாயி நாதருக்கு மங்களம் உண்டாகட்டும்.