Thursday, April 26, 2007
ஸ்ரீ சத்ய சாயி சுப்ரபாதம் - 2
த்வன் நாம கீர்த்தன ரதாஸ் தவ திவ்ய நாம
காயந்தி பக்தி ரஸபான ப்ரஹ்ருஷ்ட சித்தா
தாதும் க்ருபா ஸஹித தர்ஸனம் ஆசுதேப்ய:
ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்
உன்னுடைய தெய்வீகமான திருநாமங்களைப் பாடுவதில் இன்புறும் அன்பர்கள் பக்தியெனும் அமுதத்தைப் பருகி மகிழ்ந்த உள்ளத்தவராய் உங்களின் தெய்வீகத் திருநாமங்களைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரும்புகின்ற உங்களின் கருணையுடன் கூடிய தரிசனத்தைத் தந்தருளுங்கள். ஸ்ரீ சத்ய சாயி பகவானே! உங்களுக்கு நற்காலையாகட்டும்.
ஆதாய திவ்ய குஸுமானி மனோஹரானி
ஸ்ரீ பாத பூஜன விதிம் பவத் அங்க்ரி மூலே
கர்த்தும் மஹோத்ஸுகதயா ப்ரவிசந்தி பக்தா
ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்
தெய்வீகமான மனத்தை மயக்கும் நறுமணம் கொண்ட மலர்களை தங்களின் திருப்பாதங்களுக்கு விதி முறைகளின் படி பூஜை செய்ய மிகுந்த உற்சாகத்தோடு பக்தர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஸ்ரீ சத்ய சாயி பகவானே! உங்களுக்கு நற்காலையாகட்டும்.
Saturday, April 21, 2007
ஸ்ரீ சத்ய சாயி சுப்ரபாதம் - 1
ஓம் ஓம் ஓம்
ஈஸ்வராம்பா சுத ஸ்ரீமன் பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட சத்ய சாயீச கர்த்தவ்யம் தைவம் ஆஹ்னிகம்
உத்திஷ்டோத்திஷ்ட பர்த்தீச உத்திஷ்ட ஜகதீபதே
உத்திஷ்ட கருணாபூர்ண லோக மங்கள சித்தயே
ஈஸ்வராம்பாவின் திருமகனே! திருவாளனே! அதிகாலை நேரம் தொடங்கியது.
எழுந்திடுவாய் சத்ய சாயீஸ்வரா! தினந்தோறும் நடக்கும் தெய்வீகக் கடமைகள் நடக்க வேண்டும்!
எழுந்திடுவாய் எழுந்திடுவாய் பர்த்தியின் தலைவா! எழுந்திடுவாய் உலக நாயகா!
எழுந்திடுவாய் கருணைக் கடலே! உலகத்திற்கு மங்களத்தை விளைவிப்பாய்!
சித்ராவதி தட விசால சுசாந்த சௌதே
திஷ்டந்தி சேவக ஜனாஸ் தவ தர்சனார்த்தம்
ஆதித்ய காந்திர் அனுபாதி ஸமஸ்த லோகான்
ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்
சித்ராவதி நதிக்கரையில் இருக்கும் அமைதியான ப்ரசாந்தி நிலையத்தில் உங்கள் தரிசனத்திற்காக உன்னுடைய அடியார்கள் எல்லாம் கூடியிருக்கிறார்கள். சூரியனின் கதிர்கள் எல்லா உலகங்களிலும் நிறைந்து உள்ளது. ஸ்ரீ சத்ய சாயி பகவானே! உங்களுக்கு நற்காலையாகட்டும்.
Subscribe to:
Posts (Atom)