Thursday, May 24, 2007

ஸ்ரீ சத்ய சாயி சுப்ரபாதம் - 4



ஸீதா ஸதீ சம விஸுத்த ஹ்ருதம்புஜாதா
பஹ்வங்கனா கரக்ருஹீத ஸுபுஷ்பஹாரா
ஸ்துன்வந்தி திவ்ய நுதிபி: பணிபூஷணம் த்வாம்
ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்


சீதாதேவியையும் உமாதேவியையும் போன்று தூய்மையான மனத்தாமரையைக் கொண்ட பெண்கள் பல விதமான ஆபரணங்களை அணிந்து கொண்டு பூமாலைகளை கைகளில் ஏந்திக் கொண்டு உன்னுடைய பல விதமான புகழ்களைப் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் - பாம்பினை அணிகலனாக அணிந்தவனே. ஸ்ரீ சத்ய சாயி பகவானே! உங்களுக்கு நற்காலையாகட்டும்.

ஸுப்ரபாதம் இதம் புண்யம் யே படந்தி தினே தினே
தே விசந்தி பரந்தாம ஞான விக்ஞான ஸோபிதா:

புனிதமான இந்த சுப்ரபாதத்தை யாரொருவர் தினந்தோறும் அன்புடன் ஓதுகிறார்களோ அவர்கள் ஞான அனுபவங்களைப் பெற்று பரந்தாமத்தை அடைந்து சுகமுறுவார்கள்.

மங்களம் குரு தேவாய
மங்களம் ஞான தாயினே
மங்களம் பர்த்தி வாசாய
மங்களம் சத்ய சாயினே

குருதேவருக்கு மங்களம் உண்டாகட்டும்.
ஞானத்தை அருளுபவருக்கு மங்களம் உண்டாகட்டும்.
புட்டபர்த்தியில் வாழ்பவருக்கு மங்களம் உண்டாகட்டும்.
சத்ய சாயி நாதருக்கு மங்களம் உண்டாகட்டும்.

Thursday, May 3, 2007

ஸ்ரீ சத்ய சாயி சுப்ரபாதம் - 3



தேசாந்தராகத புதாஸ் தவ திவ்ய மூர்த்திம்
சந்தர்ஸனாபிரதி ஸம்யுத சித்த வ்ருத்யா
வேதோக்த மந்த்ர படனேன லஸந்த்ய ஜஸ்ரம்
ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்


வெளி நாடுகளிலிருந்த வந்த அறிஞர்கள் எல்லாம் உங்களது தெய்வீகமான திருமேனியின் திவ்ய தரிசனத்தைக் காணும் ஆவலுடன் கூடிய மனத்துடன் வேத மந்திரங்களை ஓதிக்கொண்டு அதனால் ஏற்பட்ட மன அமைதியுடன் வீற்றிருக்கின்றார்கள். ஸ்ரீ சத்ய சாயி பகவானே! உங்களுக்கு நற்காலையாகட்டும்.

ச்ருத்வா தவாத்புத சரித்ரம் அகண்ட கீர்த்திம்
வ்யாப்தாம் திகந்தர விசால தராதலேஸ்மின்
ஜிக்ஞாஸு லோக உபதிஷ்டதி சாஸ்ரமேஸ்மின்
ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்

எல்லா திசைகளிலும் விசாலமான இந்த பூமி முழுவதும் பரவியிருக்கும் உங்கள் புகழையும் உங்களுடைய அற்புதமான சரித்திரத்தையும் கேள்விப்பட்டு ஞானத்தைத் தேடும் அன்பர்கள் எல்லோரும் உங்களுடைய ஆசிரமத்தில் கூடியிருக்கிறார்கள். ஸ்ரீ சத்ய சாயி பகவானே! உங்களுக்கு நற்காலையாகட்டும்.